செய்திகள்

புகளூர் ரெயில்வேகேட் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

Published On 2018-05-30 19:42 IST   |   Update On 2018-05-30 19:42:00 IST
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
வேலாயுதம்பாளையம்:

கரூர் மாவட்டம்,புகளுர் அருகே செம்படா பாளையத்தைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (28). இவரது நண்பர்கள் திருநெல்வேலியை சேர்ந்த  முத்துக்குமார் (26) மற்றும் சிவகங்கையை சேர்ந்த பரமசிவம் (37).

இவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் புகளுர் ரெயில்வே கேட் அருகே உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை முத்துக்குமார் ஓட்ட தினேஷ்குமாரும், பரமசிவமும் பின்னால் அமர்ந்து இருந்தனர். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையில் இருந்த தடுப்பு சுவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் 3 பேரும்  கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் முத்துகுமார் பரிதாபமாக இறந்தார். பரமசிவம், தினேஷ்குமார் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 
Tags:    

Similar News