செய்திகள்

செங்குன்றத்தில் பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர்கள்

Published On 2018-05-14 08:56 GMT   |   Update On 2018-05-14 08:56 GMT
செங்குன்றத்தில் பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர்களை தட்டிக்கேட்ட கணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
செங்குன்றம்:

செங்குன்றத்தை அடுத்த எடப்பாளையம் பாரதியார் தெருவில் 39 வயது இளம்பெண் கணவருடன் வசித்து வருகிறார். நேற்று மாலை இளம்பெண் வீட்டின் வெளியே உள்ள குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார்.

இவர்களது வீட்டின் அருகே பாழடைந்த ஒரு வீடு உள்ளது. அங்கு 6 வாலிபர்கள் இருந்தனர். குளியலறையில் சத்தம் கேட்டு 6 வாலிபர்களும் இளம்பெண்ணின் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் தாங்கள் வைத்திருந்த செல்போனில் அந்த பெண் குளிப்பதை வீடியோ எடுத்தனர். சத்தம்கேட்டு வீட்டில் இருந்து வெளியே வந்த இளம்பெண்ணின் கணவர் வாலிபர்களை கண்டித்தார். இதில் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் இளம்பெண்ணின் கணவரை சரமாரியாக தாக்கி தப்பி சென்றுவிட்டனர்.

இதுகுறித்து செங்குன்றம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அதே பகுதியை சேர்ந்த நரேஷ், ஷியாம், முரளி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குபதிவு செய்து தேடிவருகிறார்கள். தாக்குதலில் காயம் அடைந்த இளம்பெண்ணின் கணவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
Tags:    

Similar News