செய்திகள்

வருமான வரித்துறை புகாருக்கு ப.சிதம்பரம் குடும்பத்தினர் மறுப்பு

Published On 2018-05-12 08:10 GMT   |   Update On 2018-05-12 08:10 GMT
வருமான வரித்துறையின் புகார் குறித்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ப.சிதம்பரம் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். #PChidambaram #IncomeTax
சென்னை:

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் சொத்துக்கள் வாங்கியதாகவும், அதை தங்களது வருமான வரி கணக்கில் காட்டவில்லை என்றும் வருமான வரித்துறை புகார் கூறியது.

இங்கிலாந்தில் ரூ.6 கோடி மதிப்புள்ள சொத்துக்களும், அமெரிக்காவில் ரூ.3.28 கோடி மதிப்புள்ள சொத்துக்களும், வாங்கப்பட்டதாக அதற்கு விளக்கம் கேட்டு வருமான வரித்துறை நோட்டீசு அனுப்பியது. இதை எதிர்த்து 3 பேரும் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்தும் அப்பீல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கருப்பு பண தடுப்புச் சட்டத்தின்கீழ் நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக புகார் மனுவை சென்னை சிறப்பு கோர்ட்டில் வருமான வரித்துறை தாக்கல் செய்துள்ளது.



வருமான வரித்துறையின் புகாருக்கு ப.சிதம்பரம் குடும்பத்தினர் சார்பில் ஆடிட்டர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். வருமான வரித்துறை கூறியுள்ள புகார் தவறு. ப.சிதம்பரம் குடும்பத்தினர் சொத்துக்கள் எதையும் மறைக்கவில்லை. வருமான வரித்துறையின் புகார் குறித்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர். #PChidambaram #IncomeTax

Tags:    

Similar News