செய்திகள்
மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ரேஷன் கார்டு, ஆதார் கார்டுகளை கலெக்டரிடம் ஒப்படைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலை வாய்ப்பு, வீட்டுமனை பட்டா, திருமண உதவி திட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 346 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக வழங்கினர். பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விபரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு உரிய பதிலை வழங்குமாறு அறிவுறுத்தினார்.
திருமானூர் கொள்ளிட கரையோர கிராமங்களில் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மணல் குவாரியால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் மற்றும் விவசாய பிரச்சினை அதிகரித்துள்ளது. இதனால் புதிய மணல் குவாரி அமைக்க கொண்டுவரப்பட்டுள்ள பொக்லைன் எந்திரத்தை அப்புறப்படுத்த வேண்டும். மணல் குவாரி அமைப்பதை தடைசெய்ய வேண்டும் என கொள்ளிட நீர் ஆதார பாதுகாப்பு குழு இயக்கத்தினர் சாலை மறியல், கடையடைப்பு, மனித சங்கிலி உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றங்கரையில் வசிக்கும் திருமானூர், திருமழப்பாடி, ஏலாக்குறிச்சி, தூத்தூர், கோமான், குருவாடி, அரண்மனைக்குறிச்சி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி தங்களுடைய ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்க போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கிராமமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது இதுநாள் வரை மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட மணல் குவாரி அமைக்கும் பணி நடைபெறும் இடத்தை நேரில் ஆய்வு செய்ய வில்லை. ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் மக்கள் எதற்காக போராடுகிறார்கள் என தெரியும் என்றனர். மேலும் தங்களது எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையில், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையா அட்டை ஆகியவற்றை கலெக்டர் அலுவலக ரோட்டில் போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாவட்ட கலெக்டரிடம் மணல் குவாரி அமைக்க கூடாது என வலியுறுத்தி ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை கலெக்டரிடம் ஒப்படைத்து கோரிக்கை மனு அளித்தனர்.
தொடர்ந்து கூட்டத்தில் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் சார்பில், அரியலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஏலாக்குறிச்சி, சோழமாதேவி, ஓ.கூத்தூர், மேலப்பழுவூர், தவுத்தாய்குளம் ஆகிய கிராமங்களில் மழை கால நிவாரணம் பெறும் 57 மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ரூ.11 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் மோட்டார் பொருத்திய மண்பாணை செய்யும் எந்திரங்களை கலெக்டர் வழங்கினார். மேலும் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகம் சார்பில் 35 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை பெறும் ஆணை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு கருப்புக்கண்ணாடி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
அதைதொடர்ந்து பின்னர் மாற்றுத்திறனாளிகள் வரிசையில் காத்திருக்காமல் அவர்களுக்கான தனி இருக்கையில் அமர்ந்திருந்த மாற்றுத் திறனாளிகளிடம் மனுக்களை பெற்று மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பூங்கோதை, மாவட்ட கலெக்டரின் நேர் முக உதவியாளர் பாலாஜி மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.