செய்திகள்
சத்தியமங்கலம் அருகே அனுமதியின்றி மணல் கடத்தல்- 11 லாரிகள் சிறைபிடிப்பு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அனுமதியின்றி மணல் கடத்தப்பட்டது. எனவே மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 11 லாரிகள் சிறைபிடிக்கப்பட்டது.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் பகுதி நீர்தேக்க பகுதியில் இருந்து தொடர்ந்து மணல் கடத்தி செல்லப்படுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து அந்த பகுதி மக்கள் அந்த லாரிகளை கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று சத்தியமங்கலம் அருகே பவானிசாகர் நீர் தேக்க பகுதியில் சுஜில்குட்டை, பூதிக்குப்பம் என்ற இடத்தின் வழியாக லாரிகள் வந்தன.
சந்தேகம் அடைந்த பொது மக்கள் அந்த லாரிகளை சிறைபிடித்து நிறுத்தினர். அந்த லாரிகளை சோதனையிட்டனர்.
அப்போது அந்த லாரிகளில் அனுமதியில்லாமல் செம்மண், மணல் அள்ளி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. வண்டல் மண் அள்ளுவதாக வந்து செம்மண், மணலை கடத்தி செல்வதும் தெரியவந்தது.
எனவே அங்கு வந்த 11 லாரிகளையும் பொதுமக்கள் சிறை பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட் டது.
லாரிகள் சிறைபிடிக்கப்பட்ட தகவல் போலீசாருக்கும், அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். #Tamilnews