செய்திகள்

லஞ்சம் பெற்ற புகாரில் திருவாரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பணி இடைநீக்கம்

Published On 2018-05-04 02:50 GMT   |   Update On 2018-05-04 02:50 GMT
மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.69 லட்சம் லஞ்சம் பெற்ற புகாரில் திருவாரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை:

திருவாரூர் மாவட்ட குற்ற ஆவண காப்பகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டாக இருந்தவர் முகமது பலூல்லா. இவர் இம்மாத இறுதியில் பணி ஓய்வு பெற இருந்தார். இந்தநிலையில் அவரை பணி இடைநீக்கம் செய்து தமிழக டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முகமது பலூல்லா கடந்த 2013-ம் ஆண்டு சென்னை பொருளாதார குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டாக இருந்தார். அப்போது மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க அவர் ரூ.69 லட்சம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அதன் அடிப்படையில் முகமது பலூல்லா பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.  #tamilnews

Tags:    

Similar News