செய்திகள்

தலித் பெண் கோவிலுக்குள் அனுமதிக்க மறுப்பு - கலெக்டர் அலுவலகத்தை சோசலிஸ்டு கம்யூனிஸ்டு முற்றுகை

Published On 2018-05-02 11:58 GMT   |   Update On 2018-05-02 11:58 GMT
புதுவையில் தலித் பெண்னை கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்ததை கண்டித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி:

புதுவையை அடுத்த கூனிச்சம்பட்டில் தலித் பெண்ணை கோவிலுக்கு அனுமதிக்க மறுத்ததாக சமூக வலைதளங்களில் அதன் காட்சிகள் பரவி வந்தன. இந்நிலையில் தீண்டாமை வன்கொடுமைக்கு எதிராக செயல்பட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர்.

சோஷியலிஸ்டு யுனைடெட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் லெனின்துரை தலைமை தாங்கினார். நிர்வாகிகள் முத்து, பிரளயன், சுதாகர், சேகர், நாகராஜ், பாஸ்கர்,வெங்கடேசன், நாராயணசாமி, சிவானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கலெக்டர் அலுவலக கேட்டின் மீது ஏறிய போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்குமிடையே லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே தலீத் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கூனிச்சம்பட்டு தலித் பெண் ராதாவிற்கு நடந்த வன்கொடுமைக்கு காரணமானவர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என மனு அளித்தனர்.
Tags:    

Similar News