செய்திகள்
திருப்பத்தூர் லாட்ஜில் விபசாரம் செய்த பெண்கள் உள்பட 4 பேர் சிக்கினர்
திருப்பத்தூர் தனியார் லாட்ஜில் விபசாரம் செய்த 2 பெண்கள் உள்பட 4 பேர் போலீசாரிடம் பிடிபட்டனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் தர்மராஜா கோவில் தெருவில் உள்ள தனியார் லாட்ஜில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. திருப்பத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் நேற்று இரவு அதிரடி சோதனை செய்தனர்.
அப்போது அரியூரை சேர்ந்த சிவக்குமார் (வயது 34). ஜோலார்பேட்டையை சேர்ந்த நாகராஜ் (36) மற்றும் 2 பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.
அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டத்தில் இதுபோல விபசாரம் நடக்கிறதா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பிடிபட்ட பெண்கள் 2 பேரை காப்பகத்தில் சேர்த்தனர்.