செய்திகள்

காவிரி பிரச்சனையில் மத்திய அரசு தன்னிச்சையாக செயல்பட முடியாது- நிர்மலா சீதாராமன்

Published On 2018-05-02 13:14 IST   |   Update On 2018-05-02 13:14:00 IST
காவிரி பிரச்சனையில் மத்திய அரசு தன்னிச்சையாக செயல்பட முடியாது என மதுரை விமான நிலையத்தில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார். #CauveryIssue #CauveryManagementBoard #NirmalaSitharaman
அவனியாபுரம்:

சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதுரை வந்த மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாடு முழுவதும் மிகவும் பிற்படுத்தப்பட்ட 115 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு மத்திய அரசு சார்பில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இங்கு நடைபெறும் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக வந்துள்ளேன்.

காவிரி பிரச்சனையில் மத்திய அரசு தன்னிச்சையாக செயல்பட முடியாது. மற்ற மாநிலங்களை கலந்து ஆலோசித்து விரைவில் முடிவெடுக்கும். இதனை கோர்ட்டு மூலம் தெரிவிப்போம்.


கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது காவிரி வாரியம் அமைக்கவில்லை. காங்கிரஸ் கூட்டணியில் அன்றைய தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இருந்தன. அது குறித்து ஏன் கேள்வி எழுப்பவில்லை?

விருதுநகரில் பட்டாசு வெடி விபத்தை தடுக்க அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

நீட் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்து எனக்கு தெரியாது. அதை தெரிந்து கொண்டு பதில் கூறுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். #CauveryIssue #CauveryManagementBoard #NirmalaSitharaman

Similar News