செய்திகள்

நீதிமன்ற நடவடிக்கையில் அரசியல் தலையீடு- திருமாவளவன்

Published On 2018-04-28 06:59 GMT   |   Update On 2018-04-28 06:59 GMT
நீதிமன்ற நடவடிக்கைகளை கவனிக்கின்ற போது, அரசியல் தலையீடு மிக அதிகமாக இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது என்று திருமாவளவன் கூறினார். #Thirumavalavan #Highcourt
சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

சென்னை ஐகோர்ட்டில் 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் வழங்கிய தீர்ப்பு நேற்று வந்துள்ளது.

இதில் நீதிமன்ற நடவடிக்கைகளை கவனிக்கின்ற போது, அரசியல் தலையீடு மிக அதிகமாக இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

நீதிபதிகள் சுயேச்சையாக ஆதாரங்களின் அடிப்படையில், வாதங்களின் அடிப்படையில் தீர்ப்பு சொல்வதற்கு மாறாக நிலவுகிற அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களின் பதவி உயர்வை கருத்தில் கொண்டு தீர்ப்பு அளிக்கிறார்கள் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

இந்த 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அளித்திருக்கிற தீர்ப்பு உள்ள படியே அதிர்ச்சி அளிக்கிறது.

அடுத்தபடியாக 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்த வழக்கின் தீர்ப்பை எதிர் பார்க்கிறோம்.

இதில் என்ன மாதிரி தீர்ப்பு வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இவ்வாறு அவர் கூறினார். #Thirumavalavan
Tags:    

Similar News