செய்திகள்

பண்ருட்டி அருகே கூலி தொழிலாளி விபத்தில் பலி

Published On 2018-04-26 22:36 IST   |   Update On 2018-04-26 22:36:00 IST
பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பண்ருட்டி:

பண்ருட்டி அருகே உள்ள ராயர்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (வயது 25). கூலி தொழிலாளி. இவர் நேற்று இரவு வீட்டில் இருந்து திருநாவலூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

குடும்பியான்குப்பம் பகுதியில் சென்ற போது எதிரே வந்த மாட்டு வண்டி மீது மோட்டார் சைக்கிள் திடீரென மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஆரோக்கியராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

விபத்து குறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ் பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News