செய்திகள்

ஊட்டி மலை வழிப்பாதை ரெயில் கூகுள் இணைய தளத்தில் பதிவு

Published On 2018-03-29 15:02 GMT   |   Update On 2018-03-29 15:02 GMT
கூகுள் இணையதளத்தில் சுற்றுலா பயணிகள் எளிதாக பார்க்க கூடிய வகையில் மேட்டுப்பாளையம் குன்னூர் வரையிலும், குன்னூரிலிருந்து ஊட்டி வரை மலை ரெயிலில் கேமரா பொருந்தி இணையதளத்தில் பதிவு செய்துள்ளது.
குன்னூர்:

குன்னூரில் உள்ள நூற்றாண்டு பழைமை மிக்க மலை ரெயில் ஆங்கிலேயர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை மலைகளையும் பாறைகளையும் குடைந்து குகைகள் அமைத்து ரெயில் தண்டவாளங்கள் போடப்பட்டு ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

பல்வேறு இடங்களில் மலைகளில் ரெயில் பாலங்கள் அமைக்கப்பட்டு அடர்ந்த காடுகளுக்கு இடையே இந்த மலை ரயில் ஊர்ந்து குன்னூர் வந்து அடைகிறது. இந்த ரெயிலில் வரும் சுற்றுலா பயணிகள் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர். தற்போது தென்னக ரெயில்வே நிர்வாகமும், கூகுள் இணையதளத்தை சேர்தவர்களும் மலை ரெயில் மூலம் மேட்டுப்பாளையம் குன்னூர் வரையிலும், குன்னூரிலிருந்து ஊட்டி வரை மலை ரெயிலில் கேமரா பொருந்தி இணையதளத்தில் பதிவு செய்துள்ளது.

கூகுள் இணையதளத்தில் சுற்றுலா பயணிகள் எளிதாக பார்க்க கூடிய வகையில் இந்த வசதி செய்யப்பட்டு உள்ளது. #tamilnews
Tags:    

Similar News