செய்திகள்

கும்பகோணத்தில் கல்வி அதிகாரி முன்பு வி‌ஷம் குடித்த அரசு பள்ளி ஆசிரியர்

Published On 2018-03-29 15:53 IST   |   Update On 2018-03-29 15:53:00 IST
கும்பகோணத்தில் கல்வி அதிகாரி முன்பு வி‌ஷம் குடித்த அரசு பள்ளி ஆசிரியர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கும்பகோணம்:

கும்பகோணம் காமராஜ் நகரை சேர்ந்தவர் சாலம் பொன்சிங் (வயது 35). இவரது மனைவி ஜீவா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் சாலம் பொன்சிங் இந்திரா காந்தி சாலையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். அப்போது தனது கல்வி தகுதியை மீறி நடுநிலைப்பள்ளிக்கு ஆசிரியராக பணியமர்ந்தப்பட்டது குறித்து வேதனையில் இருந்து வந்தார்.

இதுசம்பந்தமாக தொடக்க கல்வி அலுவலகத்திற்கு தெரியப்படுத்தினார். ஆனால் அவரை சோழபுரம் அரசு நடுநிலைப்பள்ளிக்கு மாற்றினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உதவி தொடக்க கல்வி அதிகாரி பரமசிவத்தை சந்தித்தார்.

அப்போது தன்னால் தொடக்க பள்ளியில் மட்டுமே பணியாற்ற முடியும். நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்ற முடியாது என தெரிவித்தார்.

இதையடுத்து கும்பகோணம் மகாமகக்குளம் அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் சாலம் பொன்சிங் பணியமர்த்தப்பட்டார்.

இந்த நிலையில் தன்னை அதே பள்ளியிலேயே நிரந்தரமாக பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என உதவி தொடக்க கல்வி அதிகாரி பரமசிவத்திடம் வற்புறுத்தி கேட்டதாக தெரிகிறது. இதற்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று பரமசிவம் கேட்டுள்ளார். இதனால் அவர், பரமசிவத்திடம் ரூ.50 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்ததாக தெரிகிறது. அப்போது பரமசிவம், தான் ஓய்வு பெறுவதற்குள் உங்களை அதே பள்ளியில் பணி நிரந்தரம் செய்து விடுவதாக தெரிவித்தார்.

Similar News