செய்திகள்

கடலூரில் கடல் சீற்றம்: 3-வது நாளாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை

Published On 2018-03-13 15:59 IST   |   Update On 2018-03-13 15:59:00 IST
கடலூரில் கடல் சீற்றம் காரணமாக 3-வது நாளாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் படகுகள் கடற்கரையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
கடலூர்:

இலங்கை அருகே தென்மேற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்றுள்ளது. வானிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக கன்னியாகுமரி கடல் பகுதியில் மீண்டும் ஒரு புயல் சின்னம் உருவாகும் என வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து கடலூரிலும் கடல் சீற்றமாகவே காணப்பட்டது. கடலில் ராட்சத அலைகள் பயங்கர சத்தத்துடன் எழுந்தன. கடல் சீற்றம் காரணமாக தாழங்குடா, துறைமுகம் பகுதி மீனவர்கள் இன்றும் 3-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் படகுகள் கடற்கரையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. #tamilnews

Similar News