செய்திகள்

கடலூர் அருகே அரசு பஸ் மோதி பெண் பலி

Published On 2018-03-05 19:14 IST   |   Update On 2018-03-05 19:14:00 IST
கடலூர் அருகே சாலையை கடக்க முயன்ற பெண் மீது அரசு பஸ் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
கடலூர்:

கடலூர் பெரியகங்ணாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பட்டம்மாள் (வயது 59). இவர் பண்ருட்டி-கடலூர் மெயின்ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அவர் திடீரென்று சாலையை கடக்க முயன்றார்.

அப்போது புதுவையில் இருந்து கடலூர் நோக்கி வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் பட்டம்மாளுக்கு தலையில் பலத்தகாயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பட்டாம்மாள் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

Similar News