செய்திகள்
கடலூரில் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
கடலூரில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர்:
கடலூர் குட்டியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பழனி(வயது 45). கூலித்தொழிலாளி. இவருக்கு குடிபழக்கம் உண்டு. தினமும் குடிப்பதால் அவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் நோய் குணமாகவில்லை. வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் பழனியை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பழனி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கடலூர் தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews