செய்திகள்
சிதம்பரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- 2 வாலிபர்கள் பலி
சிதம்பரம் அருகே இன்று மதியம் மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த பின்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அஜித்குமார்(வயது 25). இவர் இன்று மதியம் தனது நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் சிதம்பரம்-கடலூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
பெரியகுமட்டி என்ற இடத்தில் சென்றபோது எதிரே ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அப்போது கண்இமைக்கும் நேரத்தில் அஜித்குமார் வந்த மோட்டார் சைக்கிளும் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.
இதில் அஜித்குமாரும், அவருடன் சென்ற நண்பரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பரங்கிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பிணமாக கிடந்த அஜித்குமார், அவரது நண்பர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews