செய்திகள்

ஈரோட்டில் கட்டிட தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

Published On 2018-03-03 22:41 IST   |   Update On 2018-03-03 22:41:00 IST
மகள்-மகன்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியவில்லையே என்ற கவலையில் கட்டிட தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு:

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது65). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி நல்லம்மாள். இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

மணி கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் அவதிபட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலுxம் அவர்களின் மகன்கள், மகளுக்கு இன்னும் திருமணம் ஆகிவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மணி மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று மணி தற்கொலை செய்ய முடிவெடுத்து வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். இதில் மணிக்கு லேசான காயம் ஏற்பட்டதால் ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் வீட்டு விட்டனர்.

பின்னர் மாலையில் மணிக்கு உடலில் கொப்பளம் கொப்பளமாக வெடித்தது. இதை தொடர்ந்து மணியை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

Similar News