செய்திகள்

நெய்வேலியில் லாரி மோதி தொழிலாளி பலி

Published On 2018-02-27 17:09 IST   |   Update On 2018-02-27 17:09:00 IST
நெய்வேலியில் டிப்பர் லாரி மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

நெய்வேலி:

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் சுரங்கம் 1-ஏ பகுதியில் மேல் மண் நீக்கம் பணிக்காக தனியார் ஒப்பந்த நிறுவனம் அமைக்கபட்டு உள்ளது.

இந்த நிறுவனத்தின் உதவியாளராக பீகார் மாநிலத்தை சேர்ந்த சடையேந்திரயாதவ் (வயது 40) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் சடையேந்திர யாதவ் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி எதிர்பாரதவிதமாக சடையேந்திர யாதவ் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக என்.எல்.சி பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுவை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சடையேந்திர யாதவ்க்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர் இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்கமால் சடையேந்திர யாதவ் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து நெய்வேலி டவுன் ஷிப் போலீசில் பகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

Similar News