செய்திகள்

பண்ருட்டி அருகே இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2018-02-27 17:01 IST   |   Update On 2018-02-27 17:01:00 IST
பண்ருட்டி அருகே இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேலகுமாரமங்கலம் காலனியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். கூலித் தொழிலாளி. இவரது மகள் சத்யப்பிரியா (வயது 27). இவர் சம்பவத்தன்று வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

அக்கம் பக்கத்தினர் சத்யப்பிரியாவை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனிக்காமல் இன்று காலை சத்யப்பிரியா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பண்ருட்டி போலீசில் சத்யப்பிரியாவின் தாயார் அகிலாண்டம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

Similar News