செய்திகள்

காங்கயம் அருகே விவசாய அதிகாரி தூக்கு போட்டு தற்கொலை

Published On 2018-02-27 15:09 IST   |   Update On 2018-02-27 15:09:00 IST
காங்கயம் அருகே குடும்ப தகராறில் விவசாய அதிகாரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காங்கயம்:

காங்கயம் அடுத்த விஜயரங்கன் வலசில் வசித்து வந்தவர் தியாகராஜ் (வயது 33). இவர் காங்கயம் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் தமிழ்நாடு வேளாண்மை துறையில் தொழில்நுட்ப பிரிவு மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

இவருக்கு திருமணம் ஆகி ஒரு மாதமே ஆகிறது. மனைவி பெயர் திலகவதி (28). கணவன்-மனைவி இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தியாகராஜன் வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

அதிகாலையில் வீட்டில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விவசாய அதிகாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Similar News