நெய்வேலி:
நெய்வேலியை அடுத்த தெற்கிருப்பு கிராமம் கொக்கன் குப்பத்தை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி கலைச்செல்வி (வயது 26). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த ஆண்டு குமார் இறந்துவிட்டார். கலைச்செல்வி தனது 2 குழந்தைகளுடன் கொக்கன் குப்பத்தில் வசித்து வந்தார்.
இந்தநிலையில் ஆதன்டார்கொல்லை கிராமத்தில் இருக்கும் தனது தாய் தமிழ்செல்வியின் வீட்டுக்கு கலைச்செல்வி குழந்தைகளுடன் சென்றார். நேற்று மாலை வெளியே சென்றுவிட்டு வருவதாக கூறி குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு தனியாக கலைச்செல்வி சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் கலைச்செல்வி வீட்டுக்கு வரவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் பல இடங்களில் கலைச்செல்வியை தேடினார். ஆனால் எங்கும் அவர் இல்லை. இதுகுறித்து நெய்வேலி தெர்மல் போலீசில் தமிழ்செல்வி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குபதிவு செய்து மாயமான கலைச்செல்வியை தேடி வருகிறார். #tamilnews