செய்திகள்

கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2018-02-22 17:27 IST   |   Update On 2018-02-22 17:27:00 IST
தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாட்டில் காவல் துறையினர் தாக்குதல் நடத்தினர். இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடலூர்:

தூத்துக்குடியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாட்டில் காவல் துறையினர் தாக்குதல் நடத்தினர். இதனைக்கண்டித்து கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நகர செயலாளர் அமர்நாத் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ராஜேஸ்கண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆறுமுகம் கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாட்டில் தாக்குதல் நடத்திய காவல் துறையினரை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில குழு உறுப்பினர் மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுப்புராயன், கருப்பையன், மாவட்ட குழு உறுப்பினர்கள் தட்சிணாமூர்த்தி, பாஸ்கரன், தமிழரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews

Similar News