செய்திகள்

காட்டுமன்னார்கோவில் அருகே தனியார் பஸ் மோதி 1 ½ வயது குழந்தை பலி

Published On 2018-02-21 16:26 IST   |   Update On 2018-02-21 16:26:00 IST
காட்டுமன்னார்கோவில் அருகே தனியார் பஸ் மோதிய விபத்தில் 1 ½ வயது குழந்தை பரிதாபமாக இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள கந்தகுமாரன் பகுதியை சேர்ந்தவர் தங்கமணி டீக்கடை நடத்தி வருகிறார்.

இவரது மனைவி இந்திரா காந்தி இவர் மகள் தங்க மீனா(வயது 1 ½) இந்த குழந்தையை அழைத்து கொண்டு அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

அங்கு சாமி தரிசனத்தை முடித்து விட்டு அவர்கள் 2 பேரும் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இந்திராகாந்தி தனது மகளை சாலையோரத்தில் நடத்தியே அழைத்து வந்தார்.

அப்போது அந்த வழியாக சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார் கோவில் நோக்கி வந்த தனியார் பஸ் ஒன்று எதிர்பராதவிதமாக சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த குழந்தை தங்க மீனா மீது மோதியது.

இதில் பஸ் சக்கரத்தில் சிக்கிய தங்க மீனா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

விபத்தில் இறந்த தங்க மீனாவின் உடலை பார்த்து அவரது தாய் இந்திராகாந்தி கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

இது குறித்து புத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் இறந்த தங்க மீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் தாய் கண் முன்னே மகள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews

Similar News