செய்திகள்

ஸ்ரீமுஷ்ணம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

Published On 2018-02-16 21:46 IST   |   Update On 2018-02-16 21:46:00 IST
ஸ்ரீமுஷ்ணம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

ஸ்ரீ முஷ்ணம்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள வேலம்பூண்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 22) கட்டிட தொழிலாளி.

இவர் நேற்று இரவு காட்டுமன்னார் கோவிலில் இருந்து வேலம்பூண்டிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

ரெட்டியூர் அருகே உள்ள தொட்டிபாலம் பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது மணிகண்டனின் கட்டுபாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மணிகண்டன் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

விபத்து குறித்து காட்டுமன்னார் கோவில் போலீசில் புகார் செய்யபட்டது. இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

Similar News