செய்திகள்

ஆட்சிக்கு வரக்கூடாது என்ற சதியை முறியடித்து தி.மு.க. வெற்றி பெறும்: கனிமொழி எம்.பி.

Published On 2018-02-16 08:03 IST   |   Update On 2018-02-16 08:03:00 IST
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வரக்கூடாது என்ற சதியை முறியடித்து வெற்றி பெறும் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
ஆலந்தூர்:

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டு போக்குவரத்து துறையில் உள்ள குறைபாடுகளை எப்படி களைய வேண்டும், துறையை எப்படி சீர்செய்ய வேண்டும் என்ற ஆய்வறிக்கை வழங்கப்பட்டுள்ளது. அதனை முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

நல்ல அரசாங்கமாக இருந்தால் யார் நல்ல விஷயத்தை சொன்னாலும் அதில் இருக்கக்கூடிய நல்லதை எடுத்துக்கொண்டு மக்களுக்கு கொண்டுபோய் சேர்க்க வேண்டும். இந்த அரசாங்கம் அதை செய்யுமா? என்று தெரியவில்லை. மக்களை பற்றி கவலைப்படும் அரசாங்கமாக இருந்தால் அதில் இருக்கக்கூடிய விஷயங்களை செயல்படுத்தினால் நிச்சயமாக துறையை காப்பாற்ற முடியும்.

மக்கள் மீது அதிக கட்டணம் என்ற சுமையை ஏற்றாமல் இருக்க முடியும். தி.மு.க. ஆட்சிக்கு வரக்கூடாது என்று எத்தனையோ ஆண்டுகளாக சில சக்திகள் ஒன்றிணைந்து எதிர்த்துக்கொண்டு தான் இருக்கின்றன. இதை தி.மு.க. முறியடித்து வெற்றி பெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. அந்த வெற்றி இனியும் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

Similar News