செய்திகள்

கடலூரில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்: வாலிபர் கைது

Published On 2018-02-15 18:28 IST   |   Update On 2018-02-15 18:28:00 IST
கடலூரில் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்:

கடலூர் சிங்கிரிகுடி வடபுறம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 30). இவர் இன்று அதிகாலை அங்குள்ள நிலப்பகுதிக்கு சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த இளவரசன் (19) ராஜலட்சுமியை பின்தொடர்ந்து சென்றார்.

இங்கு ஏன் வருகிறாய்? என்று ராஜலட்சுமி தட்டிக் கேட்டார். உடனே ஆத்திரம் அடைந்த இளவரசன் ராஜலட்சுமியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்று விட்டார்.

இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இளவரசனை கைது செய்தனர். #tamilnews

Similar News