செய்திகள்

வி‌ஷவாயு தாக்கி 3 பேர் பலி - விடுதி மேலாளர்கள் 2 பேர் கைது

Published On 2018-02-15 15:07 IST   |   Update On 2018-02-15 15:07:00 IST
ஸ்ரீபெரும்புதூர் தனியார் விடுதியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 3 பேர் பலியானது தொடர்பாக விடுதியின் மேலாளர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த போந்துர் பகுதியில் தனியார் கேளிக்கை விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் நேற்று கழிவு நீர் தொட்டி சுத்தம் செய்த போது வி‌ஷயவாயு தாக்கி ஆவடியை அடுத்த நெமிலிச்சேரி பகுதியை சேர்ந்த முருகேசன் (35), மாரி(38), சோமங்கலம் அடுத்த மேலாத்துரை ரவி (36) ஆகிய மூன்று பேரும் பரிதாபமாக பலியாகினர்.

இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

இந்தநிலையில் 3 பேர் பலியானது தொடர்பாக விடுதியின் மேலாளர்கள் பெருமாள், பத்மகுமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். #tamilnews

Similar News