செய்திகள்

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே மொபட்டில் சென்ற ஆசிரியையிடம் நகை பறிப்பு

Published On 2018-02-14 16:04 IST   |   Update On 2018-02-14 16:04:00 IST
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே மொபட்டில் சென்ற ஆசிரியையிடம் நகை பறிப்பு காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே மோட்டாரசைக்கிளில் சென்ற ஆசிரியரிடம் நகையை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம், கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள வேதாச்சலம் நகர், வேலாயுதம் நகரில் வசித்து வருபவர் சிவசக்தி ஆசிரியை.

நேற்று இரவு அவர் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு மகளுடன் மொபட்டில் சென்றார். பின்னர் இருவரும் திரும்பி வந்து கொண்டிருந்தனர். காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே வந்த போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென சிவசக்தி ஓட்டி சென்ற மொபட் அருகே நெருங்கி வந்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து இருந்த வாலிபர் சிவசக்தி அணிந்து இருந்த 10 பவுன் நகையை பறித்தார். அதிர்ச்சி அடைந்த சிவசக்தி அவர்களை மொபட்டில் விரட்டி சென்றார்.

இதற்குள் வேகமாக சென்ற கொள்ளையர்கள் தப்பி சென்று விட்டனர். கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்த சம்பவம் காஞ்சீபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து காஞ்சீபுரம் தாலுக்கா இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews

Similar News