செய்திகள்

பண்ருட்டி அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2018-02-10 20:03 IST   |   Update On 2018-02-10 20:03:00 IST
காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக அவரது கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த காட்டுக் கூடலூரை சேர்ந்தவர் கலைசெல்வன். இவர் சென்னையில் உள்ள தனியார் கட்டுமான கம்பெனி ஒன்றில் எலக்ட்ரி‌ஷனாக வேலை செய்து வருகிறார். இவர் இதற்கு முன்பு விருத்தாசலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அப்போது அதே மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்த கருங்குழியை சேர்ந்த சவுந்தர்யா(வயது 24) என்ற பெண்ணை காதலித்து வந்தார்.

இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சவுந்தரி நேற்று காட்டுக் கூடலூரில் உள்ள தனது கணவன் வீட்டில் தனியாக இருக்கும் போது வீட்டில் உள்ள பெட்ரூமில் தூக்கில் பிணமாக தொங்கினார். மகள் சாவில் சந்தேக இருப்பதாக கூறி சவுந்தர்யாவின் தாய் சாவித்திரி முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் கொடுத்தார்.

இதுபற்றி தகவலறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் குமாரய்யா, முத்தாண்டிடிக்குப்பம் சப் இன்ஸ்பெபெக்டர் விஜயபாஸ்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று சவுந்தர்யாவின் பிணத்தை கைப்பற்றி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததால் சவுந்தரி தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீஸ் சப்-கலெக்டர் நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதனை தொடர்ந்து திடீர் திருப்பமாக கலைசெல்வனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

Similar News