கோபி அருகே பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து: தொழிலாளி பலி
கோபி:
கோபி அருகே எலத்தூரை சேர்ந்தவர் பிரான் சிஸ் (வயது 30). இவர் செம்மாண்டம்பதியில் பட்டாசு தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
இங்கு எலத்தூர், பெரிய கள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த 25-ந் தேதியும் அவர்கள் பட்டாசு தயாரித்துக் கொண்டு இருந்தனர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ அங்கிருந்த பட்டாசுகள் மீது பட்டது. இதனால் அந்த பட்டாசுகள் சத்தத்துடன் வெடித்தன. இதில் இருந்து எழுந்த தீப்பொறிகள் பறந்து விழுந்ததால் தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது.
இந்த தீ விபத்தில் பட் டாசு தொழிற்சாலை உரிமையாளர் பிரான்சிஸ், அவரது மனைவி பிரேமா, தொழிலாளர்களான எலத்தூர் செட்டி பாளையத்தை சேர்ந்த செல்லப்பன் (54) மற்றும் முருகன், ஆராயி, குருசாமி, குமாரசாமி, அமுதா, சிவபிரகாஷ், கதிர்வேல் ஆகியோர் சிக்கி உடல் கருகினர்.
கோபி தீயணைப்பு நிலைய அதிகாரி ஜெகதீசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
காயம் அடைந்த 10 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். செல்லப்பன் உள்பட 7 பேர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட னர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் செல்லப்பன் இன்று பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் பால முரளி சுந்தரம் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
அப்போது தீ விபத்துக்கான காரணம் தெரியவந்தது. தயாரான பட்டாசுகளை தொழிற்சாலையின் முன்வு காயப்போடுவது வழக்கம். அப்படி நேற்று முன்தினமும் போடப்பட்டு இருந்தன.
அதிக நேரம் காய போட் டிருந்ததால் வெயிலில் அதிக சூடாகி தீப்பிடித்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.