செய்திகள்

பஸ் கட்டண உயர்வை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2018-01-25 17:29 IST   |   Update On 2018-01-25 17:29:00 IST
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கொடுமுடி வட்டக்கிளை சார்பில் தமிழக அரசு பஸ் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி வட்டத்தலைவர்.எம். கண்ணன் தலைமையில் கொடுமுடி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
கொடுமுடி:

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கொடுமுடி வட்டக்கிளை சார்பில் தமிழக அரசு பஸ் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி வட்டத்தலைவர்.எம். கண்ணன் தலைமையில் கொடுமுடி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தை ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின்மகளிர் துணைக் குழுவைச் சேர்ந்த காந்திமதி, சத்துணவு ஊழியர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் தட்சிணாமூர்த்தி, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் கொடுமுடி வட்டார தலைவர் ரவி ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர்.

மாவட்ட தலைவர் பாஸ்கர்பாபு அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பஸ் கட்டண உயர்வினை தமிழக அரசு கிரும்பப்பெற கோரி வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஊரக வளர்ச்சிதுறை, வருவாய்த்துறை, சத்துணவு ஊழியர்கள், நெடுஞ்சாலைத் துறை என 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வட்டச்செயலாளர் அ. நிஜாம் நன்றி கூறினார்.

ஈரோடு பஸ் நிலையத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தத்தில் பா.ம.க. சார்பில் மாநில துணை பொதுச்செயலாளர் ஆறுமுகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையம் அருகே பாரதீய ஜனதா சார்பில் பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

Similar News