செய்திகள்
தீப்பிடித்து சேதமான வேன்.

கவுந்தப்பாடியில் ரோட்டோரம் நின்ற சுற்றுலா வேன் தீ பிடித்து எரிந்தது

Published On 2017-12-26 15:43 IST   |   Update On 2017-12-26 15:43:00 IST
கவுந்தப்பாடியில் கோபி சாலையில் நின்றுக்கொண்டிருந்த சுற்றுலா வேன் தீ பிடித்து எரிந்தது. தீப்பிடித்து எரிந்த வேனின் மதிப்பு ரூ.18 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

கவுந்தப்பாடி:

கவுந்தப்பாடியில் கோபி ரோட்டில் வெளியூர் சுற்று பயணம் சென்று விட்டு ஒரு சுற்றுலா வேன் வந்து நின்றது. இந்த வேன் சூப்பர் கூல் சோமசுந்தரம் என்பவருக்கு சொந்தமானது.

வேனில் இருந்து பயணிகள் இறங்கி சென்று விட்டனர். டிரைவர் செந்தில் வேனை நிறுத்தி விட்டு டீ குடிக்க சென்று விட்டார்.

அப்போது வேனின் என்ஜின் பகுதியில் இருந்து திடீரென தீ பிடித்தது. பதறிய படி டிரைவர் ஓடி சென்று அணைக்க முயன்றார். ஆனால் தீயை அவரால் அணைக்க முடியவில்லை.

இது பற்றி கோபி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.

எனினும் இந்த தீ விபத்தில் வேனின் என்ஜின், சீட்டுகள் உள்பட வேன் முழுவதும் எரிந்து நாசமாகி விட்டது. இதன் சேத மதிப்பு ரூ.18 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ரோட்டோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா வேன் எரிந்த சம்பவம் கவுந்தப்பாடியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News