செய்திகள்

ஈரோடு அருகே கார் மோதி முதியவர் பலி

Published On 2017-12-25 16:30 IST   |   Update On 2017-12-25 16:30:00 IST
ஈரோடு அருகே கார் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

கொடுமுடி -கணபதி பாளையம் நால்ரோடு அருகில் உள்ள சின்னம்மாபுரம் என்ற பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி (வயத 70). இவர் 23-ம் தேதி இரவு ஈரோடு கருர் மெயின் ரோட்டின் இடது புறமாக நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் வந்த கார் இவர் மீது மோதியதில் பலத்த அடிபட்டு கீழே விழுந்து விட்டார்.

உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். குப்புசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Similar News