செய்திகள்

அ.தி.மு.க. கோட்டையில் தி.மு.க. வெற்றி பெற முடியாது: தம்பிதுரை

Published On 2017-12-25 16:27 IST   |   Update On 2017-12-25 16:27:00 IST
அ.தி.மு.க. கோட்டையில், ஜெயலலிதாவின் கோட்டையில் தி.மு.க. வெற்றி பெற முடியாது என பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.

கோவை:

பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

ஆர்.கே.நகர் தேர்தல் முடிவானது, தி.மு.க.வின் பிரசாரம் எடுபடவில்லை என்பதை காட்டுகிறது. தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது டெல்லியில் 2ஜி தீர்ப்பை வெளியிடுவது தேர்தல் விதிமுறைக்கு எதிரானது.

தமிழக மக்கள் 2ஜி ஊழலை மனதில் வைத்து வாக்களித்து இருக்கின்றனர். ஸ்பெக்டரத்தில் ஊழல் நடைபெற்று இருக்கின்றது என்ற எண்ணத்தில் மக்கள் வாக்களித்து இருக்கின்றனர்.

அ.தி.மு.க. கோட்டையில், ஜெயலலிதாவின் கோட்டையில் தி.மு.க. வெற்றி பெற முடியாது.

ஸ்பெக்டரம் ஊழல் குறித்து மக்கள் அளித்த தீர்ப்பை சி.பி.ஐ. புரிந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News