செய்திகள்

விருத்தாசலம் அருகே மின்தடையை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Published On 2017-11-21 16:41 GMT   |   Update On 2017-11-21 16:41 GMT
விருத்தாசலம் அருகே மின்தடையை கண்டித்து பரவளுர் கிராமத்தில் இன்று விவசாயிகள் கம்புகளில் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பரவளுர், கச்சிபெருமாநத்தம், கோ.மங்கலம் போன்ற பகுதிகளில் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் நெல், கடலை, கரும்பு போன்ற பயிர்களை பயிரிட்டுள்ளனர்.

அந்த பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மின்சாரம் அடிக்கடி தடைஏற்பட்டது. மேலும் மும்முனை மின்சாரம் சரியாக வழங்கப்படவில்லை. ஒருநாளைக்கு 3 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது.இதனால் நெல் பயிர்கள் காய்ந்து கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தொடர்ந்து மின்சாரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

பரவளுர் கிராமத்தில் இன்று விவசாயிகள் கம்புகளில் கருப்பு கொடி கட்டி தங்கள் வயல்களின் வரப்புகளில் நட்டனர். மேலும் அவர்கள் கருப்பு கொடியை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
Tags:    

Similar News