செய்திகள்

பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை

Published On 2017-10-30 12:12 GMT   |   Update On 2017-10-30 12:12 GMT
புதுவையில் வட கிழக்கு பருவமழையை எதிர் கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து கவர்னர் கிரண்பேடி தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி:

புதுவையில் டெங்கு காய்ச்சலை கட்டுபடுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் வட கிழக்கு பருவமழையை எதிர் கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து கவர்னர் கிரண்பேடி தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுடன் பேசிய கவர்னர் கிரண்பேடி, இது வரை டெங்குவை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக உள்ள இடத்தின் உரிமையாளர்கள் மீது அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.

லாஸ்பேட்டை பகுதியில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருந்ததாகவும் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு கட்டுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கவர்னரிடம் விளக்க மளித்தனர். தொடர்ந்து தீவிரமான நடவடிக்கையில் ஈடுபடுமாறும், அனைத்து துறைகளும் இணைந்து செயல்படவும் கேட்டுக் கொண்டார்.

பின்னர், வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார் மழைக் காலத்தை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கவர்னரிடம் அதிகாரிகள் விளக்கினர்.

அனைத்து அரசு துறைகளுக்கும் மழைக்காலத்தை எதிர்கொள்ள தயாராக இருக்கும்படி சுற்றறிக்கை அனுப்புமாறு கவர்னர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சத்யேந்திரசிங், சுகாதாரத்துறை இயக்குனர் ராமன், உள்ளாட்சி துறை இயக்குனர் முகமது மன்சூர், தொழில்துறை இயக்குனர் மலர்கண்ணன், பொதுப் பணி துறை தலைமை என்ஜினீயர் சண்முகசுந்தரம், நகராட்சி ஆணையர்கள் கணேசன், ரமேஷ் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
Tags:    

Similar News