செய்திகள்

பாரதீய ஜனதாவின் சவாலை சந்திக்க தயார்: சீதாராம் யெச்சூரி பேச்சு

Published On 2017-10-30 11:41 GMT   |   Update On 2017-10-30 11:41 GMT
பாரதீய ஜனதாவினரின் சவாலை சந்திக்க நாஙகள் எப்போதும் தயாராக இருக்கிறோம் என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி பேசினார்.

திருப்பூர்:

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் காரல் மார்க்சின் 200-வது பிறந்த நாளை முன்னிட்டு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி கலந்து கொண்டு பேசியதாவது-

பாரதீய ஜனதாவின் பாதையை உறுதியாக எதிர்க்கும் சக்தியாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி செயல்படுகிறது. அரசியல் ரீதியாக அணி திரட்ட நாங்கள் தயாராகி வருகிறோம்.

ராமாயணத்தில் அசுவமேத யாகம் நடத்தி ராஜ்ஜிய எல்லை விரிவுபடுத்தப்பட்டது. அரசின் வெள்ளை குதிரை ஓடும் பகுதியெல்லாம் அவரது ஆளுகைக்குள் வந்து விடும். பெரும் படையை எதிர்க்க யாரும் அஞ்சுவார்கள். குதிரையை தடுக்க மாட்டார்கள். அதே போல் மோடியும், அமித்ஷாவும் வெள்ளை குதிரையை இந்தியா முழுவதும் ஓடவிட்டுள்ளனர்.

ராமாயணத்தில், ராமனின் வெள்ளை குதிரையை லவா, குசா என்ற அவனது இரட்டை குழந்தைகளே தடுத்து நிறுத்தி விட்டனர்.

அதே போல் பாரதீய ஜனதாவின் அவிழ்த்து விட்டுள்ள வெள்ளை குதிரையை தடுக்க சுத்தியல், அரிவாள் என்ற இரட்டையர்கள் இருக்கின்றனர். பாரதீய ஜனதாவினரின் சவாலை சந்திக்க நாஙகள் எப்போதும் தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News