செய்திகள்

திண்டல் அருகே விபத்து: டைப்பிஸ்டு பலி

Published On 2017-10-30 16:57 IST   |   Update On 2017-10-30 16:57:00 IST
திண்டல் அருகே விபத்தில் டைப்பிஸ்டு பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பெருமாள் சந்து பகுதியை சேர்ந்தவர் பழனிவேல்(வயது 37).

பழனிவேல் திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் டைப்பிஸ்டாக பணிபுரிந்து வந்தார்.

தினமும் தனது மோட்டார்சைக்கிளில் நாமக்கலில் இருந்து வேலைக்கு செல்லும் பழனிவேல் திருச்செங்கோடு, ஈரோடு திண்டல் வழியாக திருப்பூருக்கு செல்வது வழக்கம்.

பின்னர் மாலை வேலை முடிந்ததும் வீட்டுக்கு வந்துவிடுவார். இதே போன்று நேற்றும் மாலை வேலையை முடித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.

திண்டல் அருகே வந்த போது ரோட்டோரம் உள்ள ஒரு மின்கம்பத்தில் எதிர்பாராத வகையில் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பழனிவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News