செய்திகள்

டெங்கு நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஜி.கே.வாசன் பேட்டி

Published On 2017-10-29 12:44 GMT   |   Update On 2017-10-29 12:45 GMT
டெங்கு நோயால் தமிழகம் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது. டெங்கு நோயை கட்டுப்படுத்த அரசு இன்னும் துரிதமாக செயல்பட வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறினார்.

பவானி:

த,மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இன்று மதியம் பவானி அடுத்த சமத்துவபுரம் பகுதியில் நடந்த கட்சி கொடியேற்று விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது.-

மணல் விலை ஏற்றத்தால் கட்டுமான பணிகள் முடங்கி உள்ளது. ஆகவே விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுமான தொழிலை உயிர்ப்பிக்க செய்ய வேண்டும்.

டெங்கு நோயால் கடந்த மாதம் மட்டும் ஈரோடு மாவட்டத்தில் 11 பேர் பலியாகி உள்ளனர். பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் என த.மா.கா. ஏற்கனவே கூறி உள்ளது.


அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். கமலஹாசன் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் வரலாம். மக்கள் பார்த்து அவர்களை தேர்வு செய்வார்கள்.

டெங்கு நோயால் தமிழகம் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது. டெங்கு நோயை கட்டுப்படுத்த அரசு இன்னும் துரிதமாக செயல்பட வேண்டும். டெங்கு நோய் இல்லாத மாநிலமாக்க செய்ய வேண்டும்.


ரேசனில் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே உயர்த்திய விலையை குறைக்க வேண்டும். விலை ஏற்றம் குறித்து அமைச்சர் பேசிய பேச்சு பொறுப்பற்ற பேச்சு, இதை நான் கண்டிக்கிறேன்.

இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

Tags:    

Similar News