செய்திகள்
அந்தியூர் வனப்பகுதியில் மான் வேட்டையாடிய 2 பேர் கைது
அந்தியூர் வனப்பகுதியில் அரிய வகை விலங்கினமான கருமானை வேட்டையாடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:
அந்தியூர் வனச்சரகம் மைக்கேல்பாளையம் வன எல்லை பகுதியில் நேற்று மாலை அந்தியூர் ரேஞ்சர் ராமராஜன் தலைமையில் வனவர் ரவிச்சந்திரன், வனக்காப்பாளர் விஸ்வநாதன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் மான்களை பிடிக்க மூங்கிலால் செய்யப்பட்ட கண்ணி வைக்கப்பட்டிருந்ததும், அந்த கண்ணியில் அரிய வகை விலங்கினமான கருமான் ஒன்று சிக்கி இறந்து கிடப்பதும் தெரியவந்தது.
அதன் அருகில் 2 பேர் நின்றனர். வனத்துறையினரை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓடினர். அவர்களை வனத்துறையினர் விரட்டி பிடித்தனர்.
அவர்கள் 2 பேரும் கடம்பூர் அருகே உள்ள பொங்காடை பகுதியை சேர்ந்த சித்தன் மகன் மாதன் (35), சடையன் மகன் மாதேஷ் (35) என்பது தெரியவந்தது.
அவர்கள் வேட்டையாடிய கருமான், வேட்டையாட பயன்படுத்திய மூங்கில் கண்ணிகள், அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அவர்கள் வேட்டையாடிய அரிய வகை விலங்கினமான கருமான் என்பதால் அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
பவானி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் பின்னர் பவானி ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.