செய்திகள்

டெங்கு தடுப்பு பணியில் அலட்சியம்: ஊராட்சி செயலாளர் இடமாற்றம்

Published On 2017-10-26 20:51 IST   |   Update On 2017-10-26 20:51:00 IST
டெங்கு தடுப்பு பணியில் அலட்சியமாக இருந்த ஊராட்சி செயலாளர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
சென்னிமலை:

சென்னிமலை யூனியன், ஓட்டப்பாறை ஊராட்சி பகுதியில் மாவட்ட கலெக்டர் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து கடந்த 19-ந் தேதி திடீர் ஆய்வு நடத்தினார்.

ஓட்டப்பாறை ஊராட்சி மேலப்பாளையம் மற்றும் மாதேஸ்வரன் நகரில் ஆய்வு செய்தார். அங்கு இருந்த மேல்நிலைத்தொட்டியினை வருடக்கணக்கில் சுத்தம் செய்யாமல் சுத்தம் செய்ததாக பொய்யாக ஊராட்சி செயலாளர் பழனிசாமி கணக்கு காட்டி வந்துள்ளார்.

இது குறித்து மக்கள் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். மேலும் சரியான சாக்கடை வசதிகள் செய்யவில்லை. கொசு ஓழிப்பு பணிகள் நடக்கவில்லை என்றும் கூறினர்.

டெங்கு தடுப்பு பணியில் மிக அலட்சியமாக நடந்து கொண்டதாகவும் புகார் கூறப்பட்டது. இதனால் பணியில் அலட்சியம் காட்டியதற்காக ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி ஓட்டப்பாறை ஊராட்சியில் பணியாற்றி வரும் செயலாளர் பழனிசாமி சிறுக்கழஞ்சி ஊராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். சிறுக்கழஞ்சி ஊராட்சி செயலாளர் அய்யாவு ஓட்டப்பாறை ஊராட்சிக்கு நியமிக்கப்பட்டார். கலெக்டர் பிரபாகர் இந்த அதிரடி நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.

Similar News