செய்திகள்

கோபி அருகே வேன் மோதி மில் தொழிலாளி பலி

Published On 2017-10-11 21:58 IST   |   Update On 2017-10-11 21:58:00 IST
கோபி அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் மில் தொழிலாளி பரிதாப உயிரிழந்தார்.
கோபி:

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 40). இவர் கோபி அடுத்த கெட்டிச்செவியூரில் உள்ள ஒரு தனியார் நூல்மில்லில் பணிபுரிந்து வந்தார்.

நேற்று மதியம் சரவணகுமாரும் அவரது நணபர் பரத் (21) என்பவரும் மோட்டார்சைக்கிளில் கோபி தாராபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.

வண்டியை சரவணகுமார் ஓட்டிச் சென்றார். பின்னால் பரத் உட்கார்ந்து சென்றார். அப்போது எதிரே வந்த ஒரு வேன் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் மோட்டார் சைக்கிளிலிருந்து தூக்கி வீசப்பட்டனர்.

உடனடியாக இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே சரவணகுமார் பரிதாபமாக இறந்தார். பரத் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பாட்டார். இந்த விபத்து குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News