செய்திகள்

நீதித்துறையை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2017-09-22 21:20 GMT   |   Update On 2017-09-22 21:20 GMT
நீதித்துறையை விமர்சிப்பவர்கள் மீது சட்ட ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

ஆசிரியர்கள் சங்கத்தினர் நடத்திய போராட்டம் தொடர்பாக ஐகோர்ட்டு சில கேள்விகளை எழுப்பியது. இதை சிலர் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்வதாக நீதிபதி கிருபாகரனிடம் வக்கீல்கள் முறையிட்டனர். இதைதொடர்ந்து நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

ஐகோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவுகளை விமர்சனம் செய்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க தேவையில்லை. நீதிபதிகளையோ அல்லது நீதித்துறையையோ தவறாக விமர்சனம் செய்தால் அது நீதித்துறை மீதான மாண்பைக் குலைத்து விடும்.

எனவே, தனிப்பட்ட முறையில் நீதிபதிகளையோ அல்லது நீதித்துறையையோ விமர்சனம் செய்பவர்கள் மீது காவல்துறை சட்ட ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசு இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து பதில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News