செய்திகள்

மாணவி அனிதா தற்கொலை: தமிழக வாழ்வுரிமை கட்சியினர் தூக்குப்போடும் போராட்டம் - 10 பேர் கைது

Published On 2017-09-04 16:30 IST   |   Update On 2017-09-04 16:30:00 IST
மாணவி அனிதா தற்கொலைக்கு காரணமான மத்திய-மாநில அரசுகளை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் தூக்குப்போடும் போராட்டம் நடத்தினர். இதில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை:

நீட் தேர்வால் டாக்டர் கனவு தகர்ந்த வேதனையில் அரியலூர் மாணவி அனிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய-மாநில அரசுகளே காரணம் என பல்வேறு கட்சிகளும், மாணவ- மாணவிகளும் குற்றம் சாட்டி வருகின்றனர். போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் சிவகங்கையில் தூக்குப்போடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காக கட்சியின் பொதுச்செயலாளர் பாண்டி தலைமையில் மாவட்ட செயலாளர் காளீஸ்வரன் உள்பட சிலர் சிவகங்கை காந்தி சிலை முன்பு திரண்டனர். அவர்கள் அங்கு தூக்கு கயிற்றை கழுத்தில் மாட்ட முயன்றனர்.

இதனை தொடர்ந்து சிவகங்கை டவுன் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை கைது செய்தனர்.

இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News