செய்திகள்

போலீஸ்காரரை தாக்கியதாக அ.தி.மு.க. பிரமுகர் மகன் மீது வழக்கு

Published On 2017-08-08 16:52 IST   |   Update On 2017-08-08 16:52:00 IST
போலீஸ்காரரை தாக்கியதாக அ.தி.மு.க. பிரமுகர் மகன் மீது வழக்கு

ராயபுரம், ஆக.8-

தண்டையார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆக இருப்பவர் முகமது புகாரி (32). நேற்று மாலை போலீசாருடன் ரோந்து பணியில் ஈடுபட்டார். இளைய தெருவில் சென்றபோது போக்குவரத்துக்கு இடை யூறாக ரோட்டில் ஒரு லாரி நின்று கொண்டிருந்தது.

எனவே அந்த லாரியை அகற்றும்படி அவர் கூறி னார். அப்போது அங்கு அ.தி.மு.க. அம்மா அணி யின் 42-வது வார்டு செயலாளர் முனுசாமியின் மகன் கவிபாரதி நின்று கொண்டிருந்தார். இந்த நிலையில் இவருக்கும், சப்-இன்ஸ்பெக்டர் முகமது புகாரியுடன் வந்த போலீஸ்காரருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது போலீஸ் காரரின் சட்டையை பிடித்து கவிபாரதி தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து தண்டையார்பேட்டை போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.

Similar News