செய்திகள்

வடசென்னை மாவட்ட நிர்வாகிகள் மீண்டும் கட்சியில் சேர்ப்பு - தினகரன் நடவடிக்கை

Published On 2017-08-08 13:06 IST   |   Update On 2017-08-08 13:08:00 IST
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் நீக்கப்பட்டிருந்த வடசென்னை மாவட்ட நிர்வாகிகளை, அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மீண்டும் அவர்களை கட்சியில் இணைத்துக் கொண்டார்.
சென்னை:

வடசென்னை வடக்கு மாவட்ட அ.தி.மு.க.வில் ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்த எல்.சந்திரசேகர், ஜானகி சந்திரசேகர், கொடுங்கையூர் குகாவள்ளி, லயன் வி.ரவிச்சந்திரன் ஆகியோர் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால் கடந்த ஆண்டு ஜெயலலிதாவால் நீக்கப்பட்டிருந்தனர். இப்போது இவர்களை டி.டி.வி.தினகரன் மீண்டும் கட்சியில் சேர்த்துள்ளார்.

இது குறித்து துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

வடசென்னை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த எல்.சந்திரசேகர், ஜானகி சந்திரசேகர் (43-வது கிழக்கு வட்டம், சிங்காரவேலர் நகர்), வி.குகாவள்ளி (37-வது கிழக்கு வட்டம், கொடுங்கையூர்), வி.ரவிச்சந்திரன் (34-வது கிழக்கு வட்டம், கொடுங்கையூர்) ஆகியோர் தங்களது செயலுக்கு வருந்தி நேரிலும் கடிதம் மூலமும் மன்னிப்பு கோரி, தங்களை மீண்டும் கழகத்தில் இணைத்துக் கொள்ள கேட்டுக் கொண்டதால் இன்று முதல் உறுப்பினர்களாக கழகத்தில் இணைந்து பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்கள்.

பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக டி.டி.வி.தினகரன் கூறி உள்ளார்.

Similar News