செய்திகள்

கவுந்தபாடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி

Published On 2017-07-29 16:26 IST   |   Update On 2017-07-29 16:26:00 IST
கவுந்தபாடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கவுந்தபாடி:

கவுந்தபாடி நேரு நகரை சேர்ந்தவர் மாதேஸ்வரன்(வயது44). தொழிலாளி.

மாதேஸ்வரன் சம்பவத்தன்று வேலை விசயமாக கவுந்தபாடி-ஈரோடு செல்லும் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று எதிர்பாராத வகையில் மாதேஸ்வரன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கவுந்தபாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News