செய்திகள்

ஈரோடு டவுன் போலீஸ் டி.எஸ்.பி. சஸ்பெண்டு

Published On 2017-07-29 15:40 IST   |   Update On 2017-07-29 15:40:00 IST
ஈரோடு டவுன் போலீஸ் டி.எஸ்.பி. சுரேஷ்குமார் மீது வழக்கு நிலையில் உள்ளதால் அவரை சஸ்பெண்டு செய்து டி.ஜி.பி.ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஈரோடு:

ஈரோடு டவுன் போலீஸ் டி.எஸ்.பி.யாக பணிபுரிபவர் சுரேஷ்குமார். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் இங்கு பணியில் சேர்ந்தார்.

இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தபோது விசாரணை கைதி ஒருவர் இறந்தார். இது தொடர்பாக சுரேஷ்குமார் மீது விசாரணை நடந்து வந்தது.

இந்த வழக்கு விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் வருகிற 31-ந் தேதி சுரேஷ்குமார் பணி ஓய்வு பெறுகிறார்.

அரசு பணியில் இருப்பவர்கள் மீது வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தால் அவர்களுக்கு பணி ஓய்வு ஆணை வழங்கப்படமாட்டாது. அவர்கள் சஸ்பெண்டு செய்யப்படுவது வழக்கம்.

அந்த வகையில் டி.எஸ்.பி. சுரேஷ்குமார் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இந்த உத்தரவை போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன் பிறப்பித்துள்ளார்.

Similar News