செய்திகள்
பண்ருட்டி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்: தே.மு.தி.க. முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி உள்பட 10 பேர் படுகாயம்
பண்ருட்டி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தே.மு.தி.க. முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி தொகுதியை சேர்ந்த தே.மு.தி.க. முன்னாள் எம்.எல்.ஏ. சிவக்கொழுந்து. இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 45). இவர் அதே பகுதியை சேர்ந்த தனது உறவினர்களான சீதாலட்சுமி, குமார், அவரது மனைவி விஜி மற்றும் இளைய ராஜா ஆகியோருடன் நெய்வேலியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பண்ருட்டியில் இருந்து காரில் புறப்பட்டார்.
திருமண நிகழ்ச்சி முடிந்ததும் அதே காரில் பண்ருட்டிக்கு புறப்பட்டனர். காடாம் புலியூர் அருகேஉள்ள தாமரை குளம் என்ற இடத்தில் கார்வந்து கொண்டிருந்தபோது பெங்களூரில் இருந்து வடலூர் நோக்கி மற்றொரு கார் வந்தது. கண்இமைக்கும் நேரத்தில் இந்த 2 கார்களும் நேருக்குநேர் மோதி கொண்டன.
இதில் 2 கார்களின் முன்பக்கமும் பலத்த சேதம் அடைந்தன. இந்த விபத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. சிவகொழுந்வின் மனைவி ஜெயலட்சுமி, அவரது உறவினர்கள் சீதாலட்சுமி, குமார், அவரது மனைவி விஜி, இளையராஜா ஆகிய 5 பேர் காயம் அடைந்தனர். மற்றொரு காரில் வந்த அக்ஷயகுமார் உள்ளிட்ட 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காயம் அடைந்த 10 பேர்களை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.